/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூரம்பட்டி எல்லையில் தொடர் திருட்டால் பீதி: போலீசார் மெத்தனமே காரணம் என புகார்
/
சூரம்பட்டி எல்லையில் தொடர் திருட்டால் பீதி: போலீசார் மெத்தனமே காரணம் என புகார்
சூரம்பட்டி எல்லையில் தொடர் திருட்டால் பீதி: போலீசார் மெத்தனமே காரணம் என புகார்
சூரம்பட்டி எல்லையில் தொடர் திருட்டால் பீதி: போலீசார் மெத்தனமே காரணம் என புகார்
ADDED : மார் 11, 2024 11:49 AM
ஈரோடு: சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், தொடரும் திருட்டை கட்டுப்படுத்த, போலீசார் துாக்கத்தை கலைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், சில வாரங்களாகவே தொடர்ந்து திருட்டு நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அடுத்தடுத்து ஐந்து கடைகளில் திருட்டு நடந்தது. பூட்டிய வீடுகளும் தப்பவில்லை. இந்நிலையில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், ரயில்வே காலனி பகுதியில் வீடுகளுக்கு முன் நிறுத்தப்படும் டூ-வீலர்கள் திருட்டு போவது தொடர்ந்தது. ரயில்வே ஸ்டேஷன் முன் மக்கள், ரயில்வே தொழிலாளர்கள் நிறுத்தும் டூவீலர்களும் திருட்டு போனது.
இதனால் தொடர் திருட்டை கண்டித்து, சில தினங்களுக்கு முன் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்தால் போலீஸ் துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவர் என்பதால், சங்க நிர்வாகிகளிடம் உத்தரவாதமளித்து ஆர்ப்பாட்டத்தை, போலீசார் ரத்து செய்ய வைத்தனர். ஆனாலும் டூவீலர் திருட்டு, ரயில்வே ஊழியரின் பூட்டிய வீட்டுக்குள் திருட்டு நடந்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி ரயில்வே தொழிலாளர்கள் கூறியதாவது: ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதியில் போலீசார் கண்காணிப்பு, பகல் ரோந்து, இரவு நேர ரோந்து போதிய அளவில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. திருடர்கள் நடமாட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியவில்லை. துாக்கத்தை கலைத்து போலீசார் இனியேனும் விழிப்புடன் செயல்பட்டு, திருட்டுக்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

