/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கும்டாபுரத்தில் நடமாடும் ஒற்றை யானையால் பீதி
/
கும்டாபுரத்தில் நடமாடும் ஒற்றை யானையால் பீதி
ADDED : செப் 25, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, தாளவாடி அருகே கும்டாபுரம் பகுதியில், சில வாரமாக சாலையில் நடமாடி திரிகிறது.
அவ்வழியாக செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்புகளை எடுத்து சாப்பிடுகிறது. சரக்கு வாகனங்கள் வந்தாலும் வழிமறித்து தடுக்கிறது. வனத்துறை பணியாளர்கள் அட்டகாசம் செய்து வரும் யானையை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்களையும் விரட்டுவதால், வனத்துறையினர் விரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். சரக்கு வாகனங்களை வழிமறித்து தார்ப்பாயை கிழிக்கிறது. அதில் கரும்பு இல்லாவிட்டால் விட்டுவிடுகிறது என்றும், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.