ADDED : பிப் 21, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:அந்தியூர் யூனியனை சேர்ந்த, ஆறு பஞ்சாயத்து செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தியூர் யூனியனில், 14 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் சங்கராப்பாளையத்தில் செயலாளர் சுரேஷ், எண்ணமங்கலத்துக்கும், எண்ணமங்கலம் மணிமுத்து சங்கராப்பாளையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் நகலுார் எட்வின், மைக்கேல்பாளையத்துக்கும், மைக்கேல்பாளையம் சுப்பிரமணி நகலுாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பர்கூர் மலை பஞ்., செயலாளர் குமார் கீழ்வாணிக்கும், கீழ்வாணி பிரபாகரன் பர்கூர் மலைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்தியூர் பி.டி.ஓ., ஆனந்த் தெரிவித்துள்ளார்.

