/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி குண்டம் விழா: இன்று முதல் நாளை வரை போக்குவரத்தில் மாற்றம்
/
பண்ணாரி குண்டம் விழா: இன்று முதல் நாளை வரை போக்குவரத்தில் மாற்றம்
பண்ணாரி குண்டம் விழா: இன்று முதல் நாளை வரை போக்குவரத்தில் மாற்றம்
பண்ணாரி குண்டம் விழா: இன்று முதல் நாளை வரை போக்குவரத்தில் மாற்றம்
ADDED : மார் 25, 2024 07:03 AM
ஈரோடு : பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, இன்று மதியம் முதல், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு எஸ்.பி., ஜவகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சத்தி அருகே சத்தி--மைசூரு சாலையில் உள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை (26) குண்டம் விழா நடக்கிறது. விழாவில் ஈரோடு மட்டுமின்றி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று மதியம், 2:00 மணி முதல் நாளை இரவு, 9:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பண்ணாரி திம்பம், ஆசனூர் வழியாக மைசூரு செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வகை வாகனங்களும், சத்தியமங்கலத்தில் இருந்து வடக்குப்பேட்டை டி.ஜி புதுார் நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரேபாளையம், ஆசனுார் வழியாக செல்ல வேண்டும். கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆசனுார்-திம்பம்-பண்ணாரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் ஆசனுார், அரேபாளையம், கேர்மாளம், கடம்பூர், டி.ஜி.புதுார் நால் ரோடு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆசனுார்-திம்பம் வழியாக, பண்ணாரி கோவிலுக்கு வரும் வாகனம் மற்றும் கர்நாடகா மாநில அரசு பஸ்கள் அனைத்தும், பண்ணாரி சோதனை சாவடி அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்கள், சிறப்பு பஸ்கள், மைசூரு சாலையில் உள்ள கருணை இல்லம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பவானிசாகர், ராஜன் நகர் வழியாக வரும் வாகனங்கள், மாதேஸ்வரன் கோவில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
சத்தியமங்கலம்--பண்ணாரி செல்லும் மைசூரு சாலையில் கெய்சர் கார்டன், எல்.ஓ.ஏ பங்க், ராயல் ரோடு வேஸ், சிந்து கார்டன், நெஸ்ட் பள்ளி எதிரில் மாரப்பன் மலர் கடை, வடவள்ளி, சமத்துவபுரம், எச்பி பங்க், ஆயில் மில், குய்யனூர் பிரிவு, பேபி லேண்ட் ஆகிய இடங்களில் தற்காலிகமாக வாகன நிறுத்தும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். விழாவையொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று பஸ் ஸ்டாண்டுகளிலும், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

