sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கண்காணிப்பில் குளறுபடியால் குறையும் பி.ஏ.பி., நீர்

/

கண்காணிப்பில் குளறுபடியால் குறையும் பி.ஏ.பி., நீர்

கண்காணிப்பில் குளறுபடியால் குறையும் பி.ஏ.பி., நீர்

கண்காணிப்பில் குளறுபடியால் குறையும் பி.ஏ.பி., நீர்


ADDED : பிப் 01, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 01, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்தி-கேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்-தனர். விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: அலங்கியம், தள-வாய்ப்பட்டினம், தாராபுரம், சத்திரம் பகுதிகளில், முன்கூட்டியே நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும். இம்மாத இறு-தியில் கொள்முதலை துவக்க வேண்டும்.

ரத்தினம், தாராபுரம்: டாஸ்மாக் கடை வாயிலாக அதிக வரு-மானம் ஈட்ட முனைப்பு காட்டும் அரசு, பால் உற்பத்தியாள-ருக்கு, லிட்டருக்கு 50 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். கூட்-டுறவு சங்கங்கள் நலிந்தால் ஆவின் இருக்காது; சங்கங்களை மேம்படுத்த வேண்டும். அமராவதி ஆற்று உபரிநீரை கொண்டு, சுற்றுப்பகுதியில் உள்ள, குளம், குட்டைகளை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.

ஞானபிரகாசம், குடிமங்கலம்: குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், தென்னை வாடல் நோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அரசூர் அருகே, பி.ஏ.பி., தண்ணீர் அதிகம் திருடப்படுகிறது. கூட்-டுறவு கடன் சங்கத்தில், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி: ஹிந்துசமய அறநிலையத்துறை முடக்கிய சொத்தின் உரிமையாள-ருக்கு பட்டா வழங்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்-டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு, மீண்டும் தண்ணீர் கொடுக்க வேண்டும். முத்தம்பாளையம், தெற்கு சாணார்பா-ளையம் பகுதி குளம், குட்டைக்கு தண்ணீர் ஒதுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி முகிலன்: அரசு அலுவலர்கள் செய்யும் சமூக பணியை செய்யும் தன்னார்வலர்க-ளுக்கு பாதுகாப்பு இல்லை. கனிமவள அதிகாரிகள், கல்குவாரி-களில் நடக்கும் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும். பாது-காப்பு நலன்கருதி, சமூக ஆர்வலர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

பி.ஏ.பி., பாசன பாதுகாப்பு சங்க நிர்வாகி முத்துசாமி கூறு-கையில், 'பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு சரியில்லாததால், ஆண்-டுக்கு ஆண்டு தண்ணீர் குறை கிறது. 18 நாள் முதல், 21 நாள் இடைவெளியில் கிடைத்த சுற்று தண்ணீர், தற்போது 30 நாட்க-ளாகி விடுகிறது. நீர்மேலாண்மையை சீரமைக்க வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us