ADDED : ஜூன் 28, 2026 02:20 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை; தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த டிரைவர் முருகேசன், 44; தனியார் நிறுவன பார்சல் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை நசியனுாருக்கு ஓட்டி வந்தார்.
சென்னிமலை அருகே கணுவாய் இறக்கம் வளைவு பகுதியில் நேற்று வந்தார். அப்போது திடீரென கட்டுப்-பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்தது. முருகேசனுக்கு காயம் ஏற்படவில்லை. லாரியில் டீசல் கசிவு ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர். உயர் மின்னழுத்த கம்பி சென்றதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னிமலை டவுனில் இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
