/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி டையிங் நிறுவனம் மீது பெற்றோர் புகார்

ADDED : ஆக 22, 2025 01:09 AM
பவானி பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் டையிங் நிறுவனம் உள்ளது. இங்கு ஆர்.ஓ., பிளாண்ட் பகுதி தொழிலாளர்கள் நேற்று காலை பணிக்கு வந்தனர்.
பிளாண்ட் தண்ணீர் கலக்கும் பகுதியில், ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில், இரு செருப்பு மிதப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்கி தேடியதில், ஒரு ஆண் சடலம் கிடந்தது.
ஆர்.ஓ., பிளாண்ட் ஆப்பரேட்டர் ரமேஷ், ௩௧, என்பது தெரிய வந்தது. ஆப்பக்கூடல், கீழ்வாணி, போகநாயக்கனுாரை சேர்ந்த ரமேஷ், மூன்றாண்டுகளாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவுப்பணிக்கு வந்தவர், சாயக்கழிவு நீர் சுத்தகரிப்பு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. நிறுவனத்தின் அஜாக்கிரதையே இதற்கு காரணம் என்று கூறி, ரமேஷின் பெற்றோர் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.