/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் பள்ளியை இடிப்பதாக தகவல் பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு
/
தனியார் பள்ளியை இடிப்பதாக தகவல் பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு
தனியார் பள்ளியை இடிப்பதாக தகவல் பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு
தனியார் பள்ளியை இடிப்பதாக தகவல் பெற்றோர்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : நவ 29, 2025 01:37 AM
தாராபுரம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இடிப்பதாக பரவிய தகவலால், பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டனர். கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. பள்ளி தாளாளர் தண்டபாணிக்கும், அருகே உள்ள இடத்தின் உரிமையாளரும், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தத்துக்கும் இடையே, பள்ளி இடம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதில் பள்ளி கட்டடம் இடிக்கப்பட உள்ளதாக, நேற்று தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி முன் திரண்டனர். பள்ளி தரப்பில் வதந்தி என தெரிவித்தும், வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் மணிமாறன் சென்றார். 'பள்ளி கட்டடம் இடிப்பது தொடர்பாக, நான் எதுவும் கூற முடியாது. ஆனால், உங்களது கோரிக்கையை கலெக்டருக்கு தெரிவிக்கிறேன்' என்றார்.
இதனால் அவரிடமும் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர். காலை, 9:00 மணிக்கு துவங்கிய போராட்டம், வாக்குவாதம், மாலை, 5:00 மணி வரை நீடித்தது. தீர்வு கேட்டு மறியல் செய்ய சென்ற பெற்றோர்களிடம், 'சி.இ.ஓ., முன்னிலையில் நாளை பேசிக் கொள்வோம். மறியல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் பெற்றோர்கள் மறியல் முடிவை கைவிட்டனர்.

