/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வகுப்பறை அருகே கழிப்பறை கட்ட பெற்றோர்கள் எதிர்ப்பு
/
வகுப்பறை அருகே கழிப்பறை கட்ட பெற்றோர்கள் எதிர்ப்பு
வகுப்பறை அருகே கழிப்பறை கட்ட பெற்றோர்கள் எதிர்ப்பு
வகுப்பறை அருகே கழிப்பறை கட்ட பெற்றோர்கள் எதிர்ப்பு
ADDED : செப் 27, 2025 01:10 AM
ஈரோடு, ஈரோடு, இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால், கழிப்பறை வசதி குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மாநகராட்சி சார்பில், 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி, மாணவ, மாணவியருக்கு என தனித்தனியாக இரு கழிப்பறை தரை மற்றும் முதல் தளத்தில் கட்டும் பணி நடக்கிறது. தரைத்தளத்தில் அமைக்கும் கழிப்பறை, படிக்கட்டுக்கு கீழ், முதல் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பறைக்கு அருகே ஜன்னலை ஒட்டி அமைத்துள்ளனர்.
இந்த வகுப்பில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பதுடன், இவ்விரு வகுப்பறை ஜன்னல் கதவைக்கூட திறக்க முடியாதபடி, கழிப்பறை சுவரை ஒட்டி வைத்துள்ளனர்.
இங்கு கழிப்பறை அமைந்தால் குழந்தைகளால் படிக்க இயலாதபடி துர்நாற்றம் வீசும் என பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து, பணியை நேற்று நிறுத்தினர்.
ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ''கழிப்பறை தேவை உள்ளது. வேறு இடவசதி இல்லை. மாற்று இடம் இல்லாததால், படிக்கு கீழ், வகுப்பறை அருகே கட்டுகிறோம்,'' என்றனர்.
ஆனால், முதல்வர் அறை அருகேயும், அதை ஒட்டிய பகுதியில் செடிகள் வைத்து பராமரிக்கும் இடம் என உள்ளதால், அதுபோல வேறு இடத்தில் அமைக்க பெற்றோர் கருதுகின்றனர். இப்பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையரிடம் பேசி, மறு ஆய்வுக்கு பின் முடிவு செய்யலாம், என பணியை நிறுத்தி
சென்றனர்.