sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்

/

பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்

பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்

பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்


ADDED : ஜன 11, 2024 11:24 AM

Google News

ADDED : ஜன 11, 2024 11:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் புகழ் பெற்று விளங்கும், கொண்டத்துக்காளியம்மன் கோவில் எப்போது அமைக்கப்பட்டது என்ற சான்று ஏதும் கிடையாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சரித்திர புகழ் பெற்ற கோவிலாக இருக்க வேண்டும். கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகம், நீண்ட சதுர வடிவில் அமைந்துள்ளது.

ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால், நான்கு திசையிலும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்துள்ளது. மண்டபத்தின் உட்பகுதியில், வழுவழுப்பான கருங்கற்களாலான அழகிய கர்ப்ப கிரகத்தில், அம்மன் அருள் வடிவாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார். வடக்கு வாயிலின் முன்புள்ள தடப்பள்ளி வாய்க்கால் அமைந்து வளம் பெருக்குகிறது. மேற்கே கல்யாண விநாயகர் எழுந்தருளி, கன்னியருக்கும், காளையருக்கும், திருமணம் கைக்கூட அருள்பாலிக்கிறார். மேற்கு வாயிலின் வழியே நுழைந்தால், வலது பக்கத்தில் அம்மைக்கு நீராட்ட, நீர் சுரக்கும் அகன்ற கிணறு அமைந்துள்ளது. மேற்கு வாயிலின் வழியே, கோவில் உள்ளே நுழைந்தால், இடப்பக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. அதையடுத்து சப்த கன்னியர் கோவில் கொண்டுள்ளார்.

கொண்டத்துக்காளியம்மன் குண்டத்தின் துவக்கத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தை வழிபட்டு, கொண்டத்து திருநீற்றை அணிந்து கொண்டு, அம்மையின் கோவிலுக்கு நுழையும் முன்,

சிங்கவாகனம் காட்சியளிக்கும்.

சிங்கவாகனம் அமைந்திருக்கும், அம்மையின் திருக்கோவில், வடக்கு வாயிலையும், கிழக்கு வாயிலையும், இணைக்கும் சுற்று மண்டபம் அமைந்துள்ளது. இதில், 28 துாண்கள் உள்ளது. அந்த

துாண்களில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன, கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளி கோடான கோடி பக்தர்களுக்கு, கொண்டத்துக்காளியம்மன் அருள்பாலிக்கிறார். அம்மையை அடிபணிந்து வணங்கி, இடம் இருந்து வலமாக வந்தால், கர்ப்ப கிரகத்தின் இடப்பக்கம் ஐம்பொன்னாலான உற்சவ மூர்த்தியாகிய,

சின்னம்மன் சன்னதி உள்ளது. அம்மனை வணங்கி வலம் வந்து, மீண்டும் அம்மையை வணங்கி கிழக்கு வாயில் வழியாக, வெளியே வந்து வெளிமண்டபத்தில் அமர்ந்து, அம்மையின் அருள் பிரசாதம் பெறுவர்.

எட்டு கைகளுடன் வீற்றிருக்கும் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்


பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மகிஷாசுரனை வதம் செய்து, சாந்தரூபமாக காட்சி தருகிறார். அம்பாள் சிரித்த முகமாக, பக்தர்கள் வேண்டும் வரத்தை அள்ளித்தரும் வகையில், காட்சி தருகிறார். வலது காலை மடித்து, இடக்காலை தொங்க விட்டிருக்கிறார். மகிஷாசுரனின் தலையை, அம்மனின் இடக்கால், பூமியில் அழுத்தியிருக்கிறது.

தேவியின் வலக்கை ஏந்தியிருக்கும் சூலாயுதம், அவனது மார்பை துளைக்கிறது. அன்னையின் எட்டு கரங்களில், எட்டு விதமான பொருட்களை கொண்டது. வலப்புறம் உள்ள நான்கு கரங்களும், மேலிருந்து கீழாக, சூலாயுதம், டமாரம், கத்தி, கிளி வடிவில் வேதாளம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இடப்புறம் நான்கு கரங்களிலும், மேலிருந்து கீழாக, அக்னிசட்டி, கேடயம், மணி, கபாலம் ஆகியவை கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us