/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவிலுக்கு 'பார்க்கிங்' வசதி; பக்தர்களின் 'வேண்டுதல்' நிறைவேறுமா?

ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு நடக்கும் விழாக்களுக்கு ஆயிரக்கணக்-கான பக்தர்கள் வருவார்கள். அதுமட்டுமின்றி எப்போதுமே பக்-தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதியில்லை. இதனால் கோவில் முன்புறம் நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோட்டை பத்ர காளியம்மன் கோவில் வீதி, தெப்பக்-குளம் வீதி, கிழக்கு பெருமாள் வீதிகளில் உள்ள குடியிருப்பு, ஜவுளி நிறுவனங்களுக்கு வரும் மக்கள், வேன், மாட்டுவண்டிகள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. தரிசனம் முடிந்து வரும் பக்தர்களும், தங்களது வாகனங்களை எடுக்க முடியாமல் திணறுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, கோவிலுக்கென்று பார்க்கிங் வசதி ஏற்படுத்த, பக்-தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோவில் வழியாக வேன், மாட்டு வண்டி செல்ல தடை விதிக்-கவும் எதிர்பார்க்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் தரப்பிலும், மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரப்படுவதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.