/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விமான நிலைய பயணியர் அவதி
/
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விமான நிலைய பயணியர் அவதி
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விமான நிலைய பயணியர் அவதி
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் விமான நிலைய பயணியர் அவதி
ADDED : ஜன 06, 2025 03:10 AM
ஓமலுார்: சேலம் விமான நிலையத்துக்கு தினமும், 400க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அருகே ஓமலுார் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ளது. குப்பூரில் இருந்து காமலாபுரம் வரை, போக்குவரத்து போலீசார், ஓமலுார் போலீசார், ஆங்-காங்கே நின்று அடிக்கடி சோதனை செய்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் சேலம் விமான நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். அப்போது மண் ஏற்றி வரும் லாரிகளை நிறுத்துகின்றனர். அவர்களும், லாரிகளை, விமான நிலையம் செல்லும் நுழைவாயில் சாலையை அடைத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் விமான பயணியர் வாகனங்கள், அந்த சாலையை கடந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் போலீசாரால் ஏற்படும் சிக்-கலுக்கு, அவர்களே தீர்வு காண வேண்டும்.