ADDED : செப் 15, 2026 07:18 AM
ஈரோடு:ஈரோட்டில்
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாவட்ட கவுன்சில் இணைப்பு
சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் தமிழ்செல்வன்
தலைமை தாங்கினார். செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து முன்னிலை
வகித்தனர்.
சட்டசபையில் முதல்வரின் பதில் உரையில் முற்றிலும்
பொருத்தமில்லாத சர்க்காரியா, மிசா பற்றி பேசியதோடு வக்கிரமான
உடல் மொழி செய்கையை வெளிப்படுத்தி, சட்டசபை மாண்பை
அசிங்கப்படுத்தியுள்ளர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலினை
சங்கடப்படுத்திய த.வெ.க., மைனாரிட்டி அரசின் முதல்வர் விஜய்க்கு
கண்டனம் தெரிவிக்கிறோம். மாநில அளவில், மத்திய-மாநில அரசுகளின்
தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வரும், 22ல் நடக்கும்
ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., தரப்பில் திரளாக பங்கேற்கவும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
