/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுபவமில்லாத அலுவலர்களால் கட்சியினர் பரிதவிப்பு:'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...'
/
அனுபவமில்லாத அலுவலர்களால் கட்சியினர் பரிதவிப்பு:'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...'
அனுபவமில்லாத அலுவலர்களால் கட்சியினர் பரிதவிப்பு:'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...'
அனுபவமில்லாத அலுவலர்களால் கட்சியினர் பரிதவிப்பு:'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...'
ADDED : மார் 20, 2024 01:28 AM
ஈரோடு:தேர்தல் அனுபவம் இல்லாத அலுவலர்களால், தகவல் பெற முடியாமல் கட்சியினர், சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய வருவோர் சிரமப்படுகின்றனர்.
இதுபற்றி கட்சி தேர்தல் பணி செய்வோர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய, ஈரோடு கலெக்டர் அலுவலகம் ஸ்டேட் பாங்க் மாடியில், மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம், தேர்தல் பிரிவு தாசில்தாருடன் செயல்படுகிறது. அடுத்த கட்டடத்தின் முதல் தளத்தில் கலெக்டர் அறை, கூட்ட அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), வேட்பு மனு உதவி மையம், வேட்பு மனு படிவம் வழங்கும் இடம் என தனித்தனி அறைகள் உள்ளன.
இங்குள்ள பல அலுவலர்கள் தேர்தல் அனுபவம் இல்லாதவர்களாக இதனால் சந்தேகங்களை தெளிவுபடுத்தாமல், 'எலெக்ஷன் கமிஷன் வெப்சைட்டில் தனித்தனியாக உள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்கின்றனர்.
கடந்த தேர்தல்களில் பணியாற்றிய கலெக்டர்கள், ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி படிவத்தை பூர்த்தி செய்தும், சந்தேகம் வந்தால் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசியும் தெளிவுபடுத்தினர். தேர்தல் பிரிவு அலுவலகத்தில், தேர்தல் பணி செய்த அனுபவஸ்தர்கள், ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்தி, விளக்கம் அளித்தனர். தற்போது அவ்வாறு இல்லாததால், கடந்த இரு தினங்களில் கட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி சுயேட்சையாக விண்ணப்பிக்க விரும்பி வருவோர், முறையான தகவலை பெற முடியாமல் திரும்பினர்.
மனுத்தாக்கல் முதல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை வரை, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கும், தகுதியான நபர்களை தேர்தல் பிரிவில் நியமிக்க வேண்டும். இவ்வாறு கட்சியினர் கூறினர்.

