/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் இன்றி நோயாளிகள் ஏமாற்றம்
/
ஈரோடு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் இன்றி நோயாளிகள் ஏமாற்றம்
ஈரோடு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் இன்றி நோயாளிகள் ஏமாற்றம்
ஈரோடு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் இன்றி நோயாளிகள் ஏமாற்றம்
ADDED : மார் 17, 2025 04:01 AM
ஈரோடு: ஈரோடு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், நோயாளிகள் வழக்கம்போல் சிகிச்சைக்கு சேலம், கோவைக்கு செல்லும் நிலை தொடர்கிறது.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 67 கோடி ரூபாய் மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி (பல்நோக்கு) மருத்துவமனை கட்டப்பட்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்-கான புற நோயாளிகள், நுாற்றுக்கணக்கான உள்நோயாளிகள் வந்து செல்கின்றனர். மல்டி ஸ்பெஷாலிட்டி ஆன பின்னரும், உரிய டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் நோயா-ளிகளை கோவை, சேலத்துக்கு அனுப்பும் சூழல் தொடர்கிறது. ஏழை நோயாளிகள் பெரும் சிரமம், அலைக்கழிப்புக்கு ஆளாகின்-றனர். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவ விசாரணை, பரி-சோதனை மட்டுமே செய்யப்படுகிறது. சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்வதில்லை எனவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: மூளை நரம்பியல், ரத்த நாளங்கள் பிரிவு, புற்று நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு, சிறுநீரக பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இல்லை. ஆஞ்சியோ பிளாஸ்ட், ஆஞ்-சியோ கிராம் செய்ய சிறப்பு நிபுணர்கள் இல்லை. இதுபோன்று பல்வேறு பிரிவுகளிலும் ஓராண்டுக்கு மேலாகியும் உரிய சிறப்பு நிபுணர்கள் இல்லாததால், மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டடம் துவங்கும் முன்பிருந்த நிலையே தற்போதும் நீடிக்கிறது. மொத்தம், 21 டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இம்மருத்து-வமனையில் டயாலிசிஸ் மட்டுமே செய்து கொள்ள முடியும். சிறு-நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழியில்லை. சிறப்பு நிபு-ணர்களை நியமித்து ஈரோட்டிலேயே அனைத்து உடல் பிரச்-னைக்கும் தீர்வு காண எப்போது தீர்வு கிடைக்கும் என தெரிய-வில்லை. இவ்வாறு கூறினர்.
இதுபற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: பல்-வேறு மருத்துவ பிரிவுக்கு, 10 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பணி-யாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணியில் சேரக்கூடும் என எதிர்பார்க்கிறோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும். அரசு மருத்துவமனைகளில் செய்ய இயலாது. ஆஞ்சியோ பிளாஸ்ட், ஆஞ்சியோ கிராம் மருத்துவ வசதி இம்ம-ருத்துவமனைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். ரத்த நாளங்கள் பிரிவுக்கு தற்போது டாக்டர்கள் வர வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினர்.