/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் தாலுகாவில் 1,518 பேருக்கு பட்டா
/
அந்தியூர் தாலுகாவில் 1,518 பேருக்கு பட்டா
ADDED : மார் 13, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : அந்தியூர் தாலுகா பகுதியில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் க்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், பட்டா வழங்கும் நிகழ்ச்சி அந்தியூரில் நேற்று நடந்தது.
கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தலைமை வகித்தார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட, 21 பேருக்கு, இலவச வீட்டு மனை பட்டா; 42 பயனாளிகளுக்கு ரயத்துவாரி மனை நிறுத்த பட்டா; ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில், 808 பயனாளர்களுக்கு இ-பட்டா; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 647 பயனாளிகளுக்கு இ-பட்டா என, 1,518 பேருக்கு பட்டா வழங்கினார்.

