ADDED : ஏப் 28, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் அமைதி ஊர்வலம் நேற்று நடந்தது. ஆலய மறை வட்ட முதன்மை குருவும், பங்கு தந்தையுமான ராயப்பன் தலைமை வகித்தார்.
ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம் கச்சேரி வீதி, ப.செ.பார்க், மணிக்கூண்டு, நேதாஜி சாலை வழியே மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அங்கு போப் பிரான்சிஸ் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

