/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றுக்குள் விழுந்த மயில் 3 மணி நேரம் போராடி மீட்பு
/
கிணற்றுக்குள் விழுந்த மயில் 3 மணி நேரம் போராடி மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த மயில் 3 மணி நேரம் போராடி மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த மயில் 3 மணி நேரம் போராடி மீட்பு
ADDED : ஆக 26, 2025 01:23 AM
நம்பியூர், நம்பியூர் அருகே தொட்டியங்கரை குடியிருப்பு பகுதியில், 60 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் நேற்று அதிகாலை ஒரு பெண் மயில் உள்ளே விழுந்து விட்டது. மயிலுடன் வந்த ஆண் மயில், கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்து அகவியபடி இருந்தது.
இதைக்கேட்டு சென்ற அப்பகுதிவாசிகள், கிணற்றில் விழுந்த மயிலை, மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு முயற்சி தோற்ற நிலையில், மரப்பலகையை கையிற்றில் கட்டி இறக்கி, 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு போராடி மயிலை மீட்டனர். மீட்கப்பட்ட மயில் பறக்க முடியாமல் நடந்தே சென்று, அப்பகுதியில் தனக்காக காத்திருந்த ஆண் மயிலுடன் சேர்நது கொண்டது. மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.