/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயி உடல் எரிப்பு; உறவினர் போலீசில் புகார்
/
விவசாயி உடல் எரிப்பு; உறவினர் போலீசில் புகார்
ADDED : நவ 11, 2024 07:30 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள எண்ணமங்கலத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 65; வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில், இவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பட்லுார் அருகேயுள்ள வெங்ககல்லுரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 51; எனது தாய்மாமன் மகன், திருமணமாகாதவர். தந்தை இறந்ததால் எட்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சென்று பார்த்தபோது, ரவிச்சந்திரன் உடலை எரித்து விட்டனர்.
இதனால் அவரது சாவில் மர்மம் உள்ளது. உறவினர்களான சதாசிவம், பொன்னுச்சாமி, சின்னப்பாப்பா, பெரியபாப்பா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. இவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.