/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் விதி மீறிய பஸ்களுக்கு அபராதம்
/
காங்கேயத்தில் விதி மீறிய பஸ்களுக்கு அபராதம்
ADDED : ஜூன் 21, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் பகுதி அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களில், அரசு நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விதி மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்துவதாக, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் போனது. இதன் அடிப்படையில் காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் நேற்று சோதனை நடந்தது. இதில் விதி மீறிய பஸ்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.