/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்
/
உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்
ADDED : அக் 29, 2024 07:01 AM
தாராபுரம்,: உளுந்து வடையில் பல்லி இறந்து கிடந்ததால், தாராபுரம் அருகே பேக்கரி கடைக்கு,
அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம், உடுமலை சாலையை சேர்ந்தவர் செல்வம்,
45; இவருக்கு சொந்தமான பேக்கரியில், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன்,
நேற்று காலை உளுந்து வடையை பார்சலாக வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்று
குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அப்போது வடைக்குள் இறந்த நிலையில், பல்லி
இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாரா-புரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை
பெற்ற சிறுவன் உள்-ளிட்ட 4 பேர், கூறிய தகவலின்படி, அலங்கியம் போலீசார்
விசா-ரித்தனர். உணவு பாதுகாப்பு துறையினர் பேக்கரிக்கு சென்றனர். ஆய்வுக்கு பிறகு,
௩,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர்.

