ADDED : செப் 17, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மின் உற்பத்தி கழக ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதிக்கு உட்பட்ட பிற அலுவலகங்களில், பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்காக, ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக்கூட்டம், நாளை நடக்கிறது. ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர், பணியாளர் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். தனி நபர் மனுக்கள், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கை, முற்பகலிலேயே பெற்று கொள்ளப்படும்.

