ADDED : அக் 25, 2024 01:01 AM
ஓய்வூதியர் செயற்குழு கூட்டம்
ஈரோடு, அக். 25-
ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் சின்னசாமி, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கம் பரமசிவம், மணியன் முன்னிலை வகித்தனர். அஞ்சல் ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் ராமசாமி வரவேற்றார்.
புதிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஊழியர்களிடம் இருந்து தொகை பிடிக்காத, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு, 15 சதவீத உயர்வும், 2017 ஜன., முதல் ஓய்வூதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். 8 வது ஊதியக்குழுவை உடன் அமைத்து, 2026 ஜன., முதல் அமலாக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமலாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.