/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூண்டில் சிக்கிய சிறுத்தையால் மக்கள் நிம்மதி
/
கூண்டில் சிக்கிய சிறுத்தையால் மக்கள் நிம்மதி
ADDED : ஜன 16, 2024 10:15 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் நஞ்சப்பன்.
வனப்பகுதி ஒட்டிய தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். கடந்த ஆண்டு டிச., 10ம் தேதி இவரது தொழுவத்தில் புகுந்த சிறுத்தை, பசு மாட்டு கன்று குட்டியை கடித்து கொன்றது. முன்னதாக வளர்ப்பு நாய், ஒரு ஆட்டுக்குட்டி சிறுத்தைக்கு பலியானது. இதனால் டிச.,11ம் தேதி அப்பகுதியில் கேமரா மற்றும் கூண்டை வனத்துறையினர் அமைத்தனர். இந்நிலையில் நேற்று முன் இரவு கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. சத்தி புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் முன்னிலையில் நேற்று அதிகாலை, பவானிசாகர் வனச்சரகம் மங்கலப்பட்டியில், அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை கொண்டு விட்டனர். சிறுத்தை சிக்கியதால் மக்கள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.