/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோ டிரைவர் வீட்டில் துணிகர திருட்டு பட்டப்பகலில் நடந்ததால் மக்கள் அதிர்ச்சி

ADDED : நவ 15, 2025 03:09 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில், ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது, மக்கள் மத்தியில் பரப-ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த அக்கரை நெகமத்தை சேர்ந்தவர் வேலுசாமி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயமணி. நேற்று முன்தினம் ஆற்றுக்கு துணி துவைக்க சென்றவர் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கிராம் தங்க காசு, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, இரண்டு மெட்டி, 2,000 ரூபாய், ஆன்ட்ராய்டு மொபைல் போன் திருட்டு போனது தெரிந்தது. ஜெயமணி புகா-ரின்படி சத்தியமங்கலம் போலீசார், குற்றவாளிகளை தேடி வரு-கின்றனர்.