ADDED : நவ 21, 2026 04:28 AM
பெருந்துறை,:பெருந்துறை
ஒன்றியம், பொன்முடி பகுதி மக்கள் சார்பாக, யசோதரன் என்பவர், மாவட்ட
கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை, சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை
மற்றும் கடுமையான துர்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு
வருகின்றனர்.
குறிப்பாக மாலை நேரங்களில் காற்றில் கலந்து வீசும்,
கடுமையான ரசாயன நெடி காரணமாக வீட்டிற்கு வெளியே சென்று, இயல்பான
வேலைகளை கூட பார்க்க முடியவில்லை. மக்கள் சுவாசிப்பதற்கே
சிரமப்படும் அளவிற்கு காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. மாலை
நேரத்தில் கதவு, ஜன்னல்களை மூடியபடி, வீட்டிற்குள்ளேயே இருக்க
வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புகை
மற்றும் துர்நாற்றம் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது.
ஆகவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட
தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
