/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணை ஷட்டரில் கசிவு சரிபார்ப்பு பணிக்காக வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பரிதவிப்பு

ADDED : செப் 20, 2025 02:06 AM
அந்தியூர், அந்தியூர் அருகேயுள்ள வரட்டுப்பள்ளம் அணையில், 47 ஆண்டுகளுக்கு முன் மெயின் மதகு 'ஷட்டர்' மாற்றப்பட்டது. தற்போது 'ஷட்டரில்' தண்ணீர் கசிவதால் பழுது பார்க்க, நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக நேற்று முன்தினம் மதியத்திலிருந்து, கிழக்கு மற்றும் மேற்கு பள்ளத்தின் வழியாக, அணையில் இருந்து தண்ணீர் வெ ளியேற்றப்பட்டது. இதனால், 23 அடியாக இருந்த நீர்மட்டம், 21 அடியாக குறைந்துள்ளது. மேற்கு பள்ளத்தில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் லைன் மாரியம்மன் கோவில் வனப்பகுதி பள்ளத்தை கடக்க முடியாமல், காக்காயனுார் மலைவாழ் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வட்டக்காடு அருகில் கிழங்குகுழி பள்ளத்திலும் இதே நிலை நீடிக்கிறது. இங்கிருந்து அந்தியூர், செல்லம்பாளையம் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் இறங்கி செல்ல முடியாமல் கஷ்டப்பட்டனர். இதுகுறித்து நீர்வளத்துறை உதவி பொறியாளர் கிருபாகரன் கூறியதாவது: அணையிலிருந்து நான்கு அடி தண்ணீர் வெளியேற்றியபின், பணி தொடங்கி முடிக்கப்படும். அதிகபட்சம் மூன்று நாட்களில் பணி நிறைவடையும். இவ்வாறு கூறினார்.