/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்
/
மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்
மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்
மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்
ADDED : ஜூலை 30, 2025 01:24 AM
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று உள் நோயாளியாக சேர்ந்து, டவுன் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து செந்தில்குமார் கூறியதாவது: ஈரோடு மக்கள் ஆட்டோ சார்பில் ஐந்து மாதமாக ஆட்டோ ஓட்டுகிறேன்.
இதற்கு முன் பயணிகள் ஆட்டோ, பல ஆண்டாக ஓட்டினேன். நேற்று காலை 9:30 மணியளவில் பயணி ஒருவரின் மொபைல்போன் அழைப்பை ஏற்று கனி மார்க்கெட் அருகே சென்றேன். அங்கிருந்த பயணிகள் ஆட்டோ டிரைவர்கள் சிலர், பயணிகளை ஏற்ற கூடாது என்று தகராறு செய்தனர். அப்போது ராஜா, ஆசிக் என இரு ஆட்டோ டிரைவர்கள் கைகளால் என்னை அறைந்து, முகத்தில் குத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.