sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

/

மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 28, 2024 02:34 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம், அண்ணாதுரை சிலை பஸ் நிறுத்தம் அருகே, சத்தி -அத்தாணி சாலையில் மின் துறையை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டி.என். பாளையம் பவர் ஹவுஸூக்கு உட்பட்ட, காசிபா-ளையம் மின் நிலையம் பகுதியில், இந்த மாதத்தில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பலமுறை ஆன்-லைனில் புகார் அளித்தும், இதுவரை பதில் அளிக்கப்பட-வில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மின் பராமரிப்பு பணிக்காக காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மின்-தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று முன்-தினம் மதியம் 2:00 மணி முதல் நேற்று காலை, 10:00 மணி வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பங்களாபுதுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைய-டுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

டி.என். பாளையம் பகுதியில் தென்னை, பாக்கு தோப்புகள் அதிகம் உள்ளன. அப்பகுதி வழியாக லைனை கொண்டு சென்று தான், மின் இணைப்பு வழங்கி வருகிறோம். நேற்று இன்சு-லேட்டர் பழுதானதாலும், நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை. தற்போது சரி செய்து மின் இணைப்பு வழங்கி விடுவதாக, மின்வாரிய அதிகா-ரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us