/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் மக்கள் முறையீடு
/
பெருந்துறையில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் மக்கள் முறையீடு
பெருந்துறையில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் மக்கள் முறையீடு
பெருந்துறையில் குடிநீர் பிரச்னை கலெக்டரிடம் மக்கள் முறையீடு
ADDED : ஆக 05, 2025 01:29 AM
'
ஈரோடு, பெருந்துறையில் குடிநீர் பிரச்னை இருப்பதாக, இருவேறு பகுதி கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று மனு அளித்தனர்.
பெருந்துறை யூனியன் முள்ளம்பட்டி ஆண்டிகாடு காலனி மக்கள் அளித்த மனு விபரம்:
இங்கு, 64 வீடுகள் உள்ளன. தினமும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தேவையான குடிநீர் வழங்க முள்ளம்பட்டி பஞ்., எழுத்தரிடம் முறையிட்டு வருகிறோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதியில் ஒரு போர்வெல் உள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
விசேஷ காலங்களில் பணம் கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆற்று குடிநீர், போர்வெல் நீருக்காக இரு குழாய்கள் உள்ளன. ஆனால் ஆற்று குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது இல்லை. ஆண்டுதோறும் குடிநீர் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகிறோம். உரிய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இதேபோல் பெருந்துறை தாலுகா சுள்ளிபாளையம் மக்கள் அளித்த மனு: சுள்ளிபாளையம் ஊராட்சி சுள்ளிபாளையம் கிராமத்தில், 200 குடும்பங்கள் உள்ளன. ஒரு மாதமாக போதிய குடிநீர் வருவது இல்லை. ஊராட்சியில் கேட்டால் சரியான பதில் இல்லை. குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

