/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
/
கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
கரூர்-சேலம் வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 01:18 AM
கரூர், கரூர் - சேலம் ரயில்வே இருப்பு பாதை வழியில், பெரிய குளத்துபாளையத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சி, வெங்கமேடு பெரிய குளத்துபாளையம் இடையே, சேலம் ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு, 2013 முதல் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. கரூர்-சேலம் இடையே நாள்தோறும், 10க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், ரயில்கள் செல்லும் போது, பெரிய குளத்துபாளையத்தில் உள்ள கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில் பெரிய குளத்துபாளையத்தில் இருந்து, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு பகுதிக்கு விரைவாக செல்ல முடியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பெரியகுளத்துபாளையம், சின்ன குளத்துபாளையம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சந்தைபேட்டை ஆகியவை உள்ளன. அதனிடையே ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப்பாதை மட்டும் அமைக்கப்பட்டது. மழை காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை.
கரூர்-சேலம் ரயில்வே வழித்தடம், மின் தடமாக மாற்றப்பட்டுள்ளது. அதிக ரயில்கள் செல்ல துவங்கியுள்ளன. குறிப்பாக, மதுரை-பெங்களூரு இடைய வந்தே பாரத் ரயில் செல்கிறது. எதிர்காலத்தில் ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், பெரிய குளத்துபாளையத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், கரூர்-சேலம் ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.