/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்
/
தீபாவளி விடுமுறையால் கொடிவேரியில் குவிந்த மக்கள்
ADDED : நவ 02, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தீபாவளி பண்டிகை விடுமுறையால், கொடிவேரி தடுப்ப-ணையில் ஒரே நாளில், 13 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்-தனர்.
கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் ஏரா-ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் குவிவர். இந்த வகையில் தீபாவளி விடுமுறையால், நேற்று காலை முதலே கொடிவேரி தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்-பட்டனர். தடுப்பணை வழியாக, 428 கன அடி வெளியேறிய தண்ணீரில், ஆனந்தமாக குளித்தனர். மாலை, 5:00 மணி வரை, 13 ஆயிரம் பேர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நேற்று முன்தினம், 3,282 பேர் தடுப்பணைக்கு வந்-திருந்தனர்.