/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருவறைக்குள் சென்று மக்கள் வழிபாடு
/
கருவறைக்குள் சென்று மக்கள் வழிபாடு
ADDED : மார் 05, 2025 06:14 AM
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் கருவறைக்குள் சென்று, சிலைக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
பவானியில் செல்லியாண்டியம்மன் கோவில் பொங்கல் பண்டிகை இன்று நடக்கிறது. இக்கோவிலில் ஆண்டுக்கொரு முறை, பொங்கல் பண்டிகையின் போது மட்டும், பக்தர்கள் கருவறையில் நுழைந்து பால் மற்றும் புனித நீர் ஊற்றி வழிபட அனுமதிக்கப்படுவர். இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, விடிய விடிய காத்திருந்த பக்தர்கள், பால் மற்றும் புனித நீர் ஊற்றி தரிசனம் செய்தனர்.
இன்று புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் உடலில் சேறு பூசி ஊர்வலமாக செல்வர். பண்டிகையை ஒட்டி போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.