sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளங்கோவன் வீட்டில் மக்கள் அஞ்சலி

/

இளங்கோவன் வீட்டில் மக்கள் அஞ்சலி

இளங்கோவன் வீட்டில் மக்கள் அஞ்சலி

இளங்கோவன் வீட்டில் மக்கள் அஞ்சலி


ADDED : டிச 15, 2024 03:28 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன், கடந்த சில ஆண்-டாக மூச்சு திணறல், நுரையீரல் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த தீபாவளிக்கு பின் உடல் நலம் பாதித்து, நவ., 13ல் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.

சென்னையில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படும் நிலையில், ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள அவரது வீட்டில் காங்., கட்சியினர் கூடினர்.அவரது உருவப்படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்-செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள் மாலை அணிவித்து சென்றனர். சென்னையில் அவரது உடல் உள்ளதால், வி.ஐ.பி.,க்கள் அங்கு சென்றதால், ஈரோடு வீடும், அப் பகுதியும் சோகமாக காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் இவரது மகன் திருமகன் ஈவெரா, 8,523 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். உடல் நலக்கு-றைவால், 2023 ஜன., 4ல் அவர் இறந்ததும், பிப்., 27ல் இடைத்-தேர்தல் நடந்தது. இதில் காங்., சார்பில் போட்டியிட்ட இளங்-கோவன், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். தற்போது அவரது இறப்பால் தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கி-றது.

இளங்கோவன் வகித்த பதவிகள்

ஈ.வே.ரா,.வின் பேரனும், ஈ.வே.கி.சம்பத் - சுலோச்சனா தம்பதி-யரின் மகனாக இளங்கோவன் பிறந்தார். இவரின் மனைவி வர-லட்சுமி, சஞ்சய் சம்பத் மற்றும் மறைந்த எம்.எல்.ஏ., திருமகன் ஈவேரா என இரு மகன்கள். ஈரோடு கலைமகள் பள்ளி, சி.என்.கல்லுாரி மற்றும் சென்னை மாநில கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்தார்.

கல்லுாரியில் படித்தபோது மாணவர் காங்., செயலாளராக, பின் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்., தலைவர், நகர தலைவர், மாவட்ட தலைவர், மாநில பொது செயலாளர் பதவி வகித்தார். 2000-2002ல் தமிழக காங்., தலைவராகவும், 2003ல் மாநில செயல் தலைவராகவும், 2015-17 வரை மீண்டும் மாநில தலைவ-ராக பதவி வகித்தார்.

இதற்கிடையில், 1984ல் சத்தி தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், 2004ல் கோபி எம்.பி.,யாகவும் வென்று,

மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த, 2009ல் ஈரோடு லோக்சபா தொகுதியிலும், 2014ல் திருப்பூர் லோக்சபா தொகுதியிலும், 2019ல் தேனி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த, 2023 பிப்.,27ல் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.,வான நிலையில் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us