ADDED : அக் 08, 2026 04:50 AM

அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே குறிச்சி பஞ்., செல்லிகவுண்டனுார் பகுதியில், குடிநீர் கேட்டு
கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதி மக்கள் காத்திருக்கும் போராட்டம்
நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாக்கப்பட்ட, 2,000 லிட்டர் கொள்ளளவு
கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் ஏற்றி வினியோகம்
செய்யப்பட்டது. ஆனால் அந்த குடிநீர், 10 நாட்களுக்கு மட்டுமே
கிடைத்தது.அதன் பின்னர் கடந்த 15 நாட்களாக போர் தண்ணீர் வந்தது.
அந்த தண்ணீரை தான் மக்கள் குடித்து வந்தனர். எனவே இப் பகுதியில், ஆற்று
நீர் குடிப்பதற்கு வேண்டும் என வலியுறுத்தி, அம்மாபேட்டை பி.டி.ஓ.,
குகனிடம் மக்கள் மனு அளித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த சின்டெக்ஸ்
தொட்டியில், ஆற்று
நீர் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு
வினியோகிக்கப்பட்டது.
