ADDED : நவ 04, 2026 07:45 AM
ஈரோடு:பெருந்துறை
தாலுகா பிச்சாண்டம்பாளையம் பஞ்., புதுப்பாளையம் பகுதி மக்கள்,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
புதுப்பாளையம்
கிராமம் மற்றும் சுற்றிய கிராமங்களில், 2,000 குடும்பங்கள்
வசிக்கிறோம். அங்கிருந்து, 500 மீட்டருக்குள், கொச்சி - சேலம் காஸ்
பைப்லைன் பதிக்கப்பட்ட மத்திய அரசின் திட்ட, 'காஸ் கன்ட்ரோல் யூனிட்'
அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். அவ்விடத்தில் பல டன் காஸை நிரப்பி
வைத்தும், பிற பகுதிகளுக்கு குழாயில் கொண்டு செல்வதற்கான
கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த யூனிட்
அருகே, 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ள விடுதி அமைந்துள்ளது.
சுற்றிய
பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கோவில்கள் உள்ளன.
அவ்விடத்தில் அபாயமானது என்பதை விளக்கும் புகைப்படம்
அமைக்கின்றனர்.
இதனால் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்பற்ற
சூழலை ஏற்படுத்துவதால், மக்கள் வசிக்கும் இடத்தை விட்டு வேறிடத்தில்
அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
