sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள் எதிர்ப்பு

/

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள் எதிர்ப்பு

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள் எதிர்ப்பு

விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மக்கள் எதிர்ப்பு


ADDED : அக் 10, 2024 03:36 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூரில், விநாயகர் சிலையை அகற்ற கூறியதால், இந்து முன்-னணி பிரமுகர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்-றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே, பொலவபாளையம் முல்லை நகர் அழகாபுரி குடியிருப்பு பகுதியில், 39 பேருக்கு சொந்தமான பட்டா நிலங்கள் உள்ளன. அப்பகுதியில் சச்சிதா-னந்தம் என்பவருக்கு சொந்தமான, 1.20 சென்ட் பட்டா இடத்தில், 2.5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை பிர-திஷ்டை செய்ய முடிவு செய்து சிலை வைத்துள்ளனர். அதற்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவர், பொலவபாளையம் பஞ்.,ல், உரிய அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளதாக புகார் தெரிவித்து, சிலையை அகற்ற வேண்டும் என, நம்பியூர் தாசில்தா-ரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.தனியாருக்கு சொந்தமான இடத்தில், சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை அகற்ற பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்-தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்படவே, நேற்று, 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நம்பியூர் தாசில்தார் ஜாகீர் உசேன், இரு தரப்பினர் இடையே நேற்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது, இந்து முன்னணியை சேர்ந்த சம்பத்குமார், 35, என்பவர் வழிபாடு நடத்த அனுமதிக்க வலியுறுத்தி, திடீரென மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீப்பற்ற வைக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்-தையில், சிலைக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கதவு அகற்றப்-பட்டு, விநாயகர் சிலை முன் வழிபாடு நடைபெற்றது. 10 நாட்க-ளுக்குள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனு-மதி பெற்ற பின்பே, வழிபாடு நடத்த வேண்டும் என தாசில்தார் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us