ADDED : செப் 01, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்; தாராபுரம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் அவ-திப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் அமராவதி ஆற்றில் நீர்வரத்து முற்-றிலும் இல்லாத நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, 10 நாட்களாகிறது. இதனால் குடிநீருக்காக பொது-மக்கள் குடங்களை இருசக்கர வாகனங்களில் ஏற்-றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில், தாராபுரம் உப்புத்துறை பாளையத்தில், மக்கள் குடிதண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து, மறியலை கைவிட்டனர்.
