தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்


ADDED : செப் 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு அருகே வாய்க்கால் மேட்டில் உள்ள, நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் முதலா-மாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானு-மதி சண்முகன், தமிழக காவல்துறை முன்னாள் இயக்குனர் ரவி, சிறப்பு விருந்தினராக கலந்து-கொண்டு, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்-முகன் தலைமை வகித்து பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் நந்தகோபால், முதலா-மாண்டு மாணவர், பெற்றோர்களை வர-வேற்றார்.

விழாவில் முன்னாள் காவல் துறை இயக்குனர் முனைவர் ரவி பேசியதாவது: கல்லுாரியில் நுழையும் உங்களுக்கு முதலில் மிகவும் தேவை-யானது தன்னம்பிக்கை. தனித்திறன், அதிலுள்ள விழிப்புணர்வு மற்றும் பலவீனம் ஆகியவற்றினை முழுமையாக உணர்வதன் மூலம் வளர்த்து கொள்ளலாம். அதே சமயத்தில் எல்லாம் தெரியும் என்கிற அதீத நம்பிக்கையை கைவிடுதல் அவ-சியம். நாள்தோறும் குறைந்தது ஆறு முதல் ஏழு மணி நேரம் உறக்கம், மாலை வேலையில் மைதானங்களில் குழுக்களாக இணைந்து விளை-யாடுவது, காலையில் நடத்தல், மிதிவண்டி ஒட்-டுதல் மற்றும் ஓடுதல் என உடலை ஆரோக்கிய-மாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.நிகழ்வில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்களான நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் மோகன்குமார் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர், மாணவர்களை வரவேற்று வாழ்த்தி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us