/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற மக்கள் வேண்டுகோள்
/
பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற மக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 06, 2025 01:42 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே ரங்கராஜ் நகர் பகுதியில், பழுதடைந்துள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள ரங்க ராஜ் நகர் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பம் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் மெயின் சாலையில், மின்கம்பம் உள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்களின் அதிர்வு ஏற்பட்டு எந்த நேரத்திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மின் ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, மின் கம்பத்தை மாற்றித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.v