/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மக்கள்
/
போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மக்கள்
போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மக்கள்
போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மக்கள்
ADDED : ஜன 22, 2024 12:00 PM
ஈரோடு: மாகாளியம்மன் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, சூரம்பட்டி மேற்கு அம்பேத்கர் வீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலை அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் இடித்து விட்டதாக கூறி, மற்றொரு தரப்பினர் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தனர். கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு டி.எஸ்.பி. ஆறுமுகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் கூறியதாவது; இப்பகுதியில், 80 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் பழமையான மாகாளியம்மன் கோவில், மாதேஸ்வரன் கோவில் இருந்தது. கோவிலை இப்பகுதியை சேர்ந்த ஆறு பேர் இடித்துவிட்டனர். இதுகுறித்து கேட்டபோது மிரட்டினர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். இதுவரை விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கோவில் சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு கூறினர்.
இதற்கிடையில், போலீஸ் ஸ்டேஷனில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியே அனுப்பினர். கோபம் கொண்ட அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம், வழக்குப்
பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.