/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்
/
ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்
ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்
ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்
ADDED : டிச 25, 2024 01:42 AM
தாராபுரம், டிச. 25-
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த வெறுவேடம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 48; பல்லடம் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, ௭:௦௦ மணியளவில் தனியார் பஸ்ஸில், மேட்டுக்கடை சென்றார்.
அப்போது பஸ்ஸில் இருந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்த ஒருவர், செந்திலிடமும் தந்துள்ளார். அதில் கிறிஸ்தவ மத பிரசார வாசகங்கள் இருந்தது. பஸ்சில் எப்படி இதுபோல் தரலாம் என்று அவர் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மொபைல்போனில் ஊர் மக்களுக்கு தகவல் அளித்தார். மேட்டுக்கடையில் செந்தில் இறங்கியபோது, பிரசார நோட்டீஸ் கொடுத்தவரும் இறங்கினார்.
அங்கு காத்திருந்த மக்கள், மத பிரசார நோட்டீஸ் கொடுத்தவரை சுற்றி வளைத்து, குண்டடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் மேட்டுக்கடையை சேர்ந்த ராமன், 52, என்பது தெரிந்தது. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.