/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை இருபுறத்திலும் முற்செடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
/
சாலை இருபுறத்திலும் முற்செடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
சாலை இருபுறத்திலும் முற்செடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
சாலை இருபுறத்திலும் முற்செடி அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2024 01:18 AM
சாலை இருபுறத்திலும் முற்செடி
அகற்ற மக்கள் வலியுறுத்தல்
குளித்தலை, நவ. 3-
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்.,ல், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் தண்ணீர்பள்ளி பரளி செல்லும் நெடுஞ்சாலையில் கருங்களாப்பள்ளி, சிவாயம், அய்யர்மலை செல்லும் முக்கிய பிரதான சாலைகள் உள்ளன.
இந்த சாலையில் அரசு, தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள், கனகர வாகனங்கள் சென்று வருகின்றன. தண்ணீர்பள்ளி புற்றுக்கோவில் முதல், சிவாயம் வரை சாலையின் இருபுறங்களிலும் முற்செடிகள் வளர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் முற்செடிகள், கொடிகள் புதர்களாக வளர்ந்துள்ளது. இவை போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.
எனவே, சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்த முற்செடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.