/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்சாயத்தாக கவுந்தப்பாடி தொடர மக்கள் வலியுறுத்தல்
/
பஞ்சாயத்தாக கவுந்தப்பாடி தொடர மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2024 07:38 AM
ஈரோடு: 'கவுந்தப்பாடி பஞ்சாயத்தை டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தக்கூடாது' என வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு வழங்கி கூறியதாவது:
பவானி தாலுகா கவுந்தப்பாடி பஞ்சாயத்து பகுதி தொழில் வளர்ச்சி இல்லாத பஞ்சாயத்தாகும். பஞ்சாயத்து அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. பெரும்பாலானவர்கள், விவசாயம், விவசாய கூலியாகவே பணி செய்வதால், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். 100 நாள் வேலையை நம்பித்தான் அனைவரும் உள்ளோம். 100 நாள் வேலையை பாதுகாப்பாக வழங்க வேண்டும். சாலை பணிகளிலும், 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
கவுந்தப்பாடியை டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தினால், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி ஆகிய வரிகளில் உயர்வு ஏற்படும். எனவே பஞ்சாயத்தாகவே நீடிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.