/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்
ADDED : அக் 10, 2024 01:43 AM
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்
பவானி, அக். 10-
எலவமலை பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி அருகே உள்ள, எலவமலை கிராம பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 10 முதல் மாலை 4:00 மணி வரை, எலவமலை கிராம பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.எலவமலை அருகேயுள்ள செங்கலாப்பாறை ரிங்ரோட்டில், பஞ்சாயத்து தலைவர் வைத்தியநாதன் தலைமையில் போரா ட்டம் நடந்தது. இதில், அனைத்து கட்சியினர் உட் பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.