/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புங்கம்பள்ளியில் பட்டப்பகலில் மது விற்றவரை மடக்கிய மக்கள் டூவீலரை சிறைபிடித்து வாக்குவாதம்

ADDED : ஜூன் 02, 2025 03:43 AM
பு.புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி பஸ் நிறுத்தத்தில், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருசக்கர வாகன டேங்க் கவ-ருக்குள் மது பாட்டில் பதுக்கி வைத்து, ஆசாமி ஒருவர் நேற்று காலை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதைக் கண்ட அப்ப-குதி மக்கள் வீடியோ எடுத்ததுடன், ஆசாமியை டூவீலருடன் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புன்செய்புளியம்-பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடை-யாத மக்கள் அவர்களிடமும் வாக்குவாதம் செய்தனர். கிரா-மத்தில், 24 மணி நேரமும் சட்டwவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனால் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறி, சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் மது விற்ற ஆசாமியை, ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர். மது விற்பனையில் ஈடுபட்டவர் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிந்தது. வழக்-குப்பதிவு செய்த போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு மிரட்டல்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் வணிகர்கள் சார்பில், போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது சிக்கியுள்ள பாலமுருகனை, பலமுறை எச்சரித்தும் கேட்-காமல் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். பொன்னம்பாளை-யத்தை தினேஷ்குமார் என்பவரிடம் வேலை செய்து வருவதா-கவும், அரசியல் செல்வாக்கு இருப்பதால் முதலாளி பார்த்துக்-கொள்வார் எனவும் கூறியுள்ளார். மது விற்பனையை எதிர்த்தால் உங்களுக்குத்தான் பிரச்னை என்றும் மக்களை மிரட்டியுள்ளார். எனவே பாலமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளனர்.