/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும் கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

ADDED : டிச 01, 2024 01:20 AM
கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும்
கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்
கொடுமுடி, டிச. 1-
கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, மக்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஜன., 2ம் தேதி உத்தரவிட்டது. அதாவது, ௯௦ நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர், நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்
சாலைத்துறை மற்றும் பேரரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவை அனைத்து துறை அதிகாரிகளும் காற்றில் பறக்க விட்டு விட்டனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் விடுத்த நிலையில், நேற்று முன்தினம் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கொடுமுடியில் பழைய ஈரோடு-கரூர் சாலையில் உள்ள வீடுகள், கடைகளில் மக்கள் நேற்று கறுப்புக்கொடி கட்டி வைத்தனர். கொடுமுடி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என உறுதி கூறியதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி, கறுப்புக்கொடிகளை மக்கள் அகற்றி கொண்டனர்.