/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுரத்தை இழக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்:'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது?'
/
சுரத்தை இழக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்:'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது?'
சுரத்தை இழக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்:'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது?'
சுரத்தை இழக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்:'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுது?'
ADDED : செப் 02, 2025 01:22 AM
ஈரோடு;ஈரோடு மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அர்பித் ஜெயின், திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இதன்படி கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமை, துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் சசிகுமார் மனு அளித்தார். அதில், மாநகராட்சி புதிய வரி விதிப்பால் 150, 200 சதுரடி உள்ள ஓட்டு வீடுகளுக்கு அதிகம் வரி வந்துள்ளது. அதை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தார். இதேபோல் சாக்கடை பிரச்னை, சாலை பிரச்னை, வரி விதிப்பில் பிரச்னை என, 11 மனு அளிக்கப்பட்டது.
என்ன சார் ஆச்சு?
குறைதீர் கூட்டம் மதியம், 3:௦௦ மணி தொடங்கி, மாலை, ௫:௦௦ மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய கூட்டம், 4:௦௦ மணிக்கு பிறகே தொடங்கியது. இதனால் மனு அளிக்க வந்த ஒரு சிலரும் கூட்டம் நடக்குமா என்ற சந்தேகத்துடனே காத்திருந்தனர். அதேபோல் செய்தி சேகரிக்க வந்த நிருபர்களை, கூட்டத்தில் அனுமதிக்காமல் அதிகாரிகள் வெளியேற்றினர். மாநகராட்சி அலுவலகத்தில் எந்நேரமும் சுற்றித்திரியும் 'பி.டி.எப்.,' பத்திரிகை நிருபர்களால் கொதிப்படைந்த அதிகாரிகள், அவர்களை மட்டும் வெளியேற்றாமல், ஒட்டுமொத்த நிருபர்களையும் வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'மடியில் கனம் இருந்தால் பயம் வரும்' என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.