/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் ஆட்டோ டிரைவர் பாதுகாப்பு கோரி மனு
/
மக்கள் ஆட்டோ டிரைவர் பாதுகாப்பு கோரி மனு
ADDED : ஆக 05, 2025 01:13 AM
ஈரோடு, ஈரோடு மக்கள் ஆட்டோ நல சங்க தலைவர் அப்துல் ரஹீம் தலைமையிலான ஆட்டோ டிரைவர்கள், கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மொபைல் செயலி மூலம் மாநகரில் ஆட்டோ இயக்குகிறோம். இந்நிலையில் மாநகர ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் எங்களிடமும், பயணிகளிடமும், ஸ்டாண்ட் அருகில் வந்து பயணிகளை ஏற்றக்கூடாது என்கின்றனர். சில ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள், எங்கள் டிரைவர்களை பயமுறுத்தும் வகையில் மிரட்டுவதுடன், தகாத வார்த்தை பேசுகின்றனர்.
இதனால் எங்கள் சங்க ஆட்டோ டிரைவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எங்கள் சங்க ஆட்டோ டிரைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கள் ஆட்டோவில் மக்கள் ஆட்டோ என்ற ஸ்டிக்கர் ஒட்ட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.