ADDED : ஜூன் 23, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; மொடக்குறிச்சி தாலுகா ஈஞ்சம்பள்ளியை சேர்ந்த மக்கள், ஈரோடு எஸ்.பி.,யிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈஞ்சம்-பள்ளி நத்தமேட்டில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலில், தற்போது இரண்டு ஊர்காரர் மட்டும் திருப்பணி செய்கின்றனர். நாளை (24ம் தேதி) கோவிலில் பாலாலயம் செய்வதாக தெரிய வந்-துள்ளது. அரசுக்கு சொந்தமான கோவிலில் ஒரு சிலர் மட்டுமே திருப்பணி செய்வது முறையாக இருக்காது. கிராமத்தில் உள்ள அனைத்து மக்க-ளுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வேண்டும். இது-தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
